கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கலீலுர் ரஹ்மான் (வயது 78) இன்று சற்றுமுன் காலமானார்.

தமிழக அரசியல்வாதி ஆவார்.கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக பிறந்த இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக  சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அரவக்குறிச்சி தொகுதியில் எம்எல்ஏவாக கடமையாற்றியிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்த தகவல் உறுதியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.