தமிழக அரசியலில் கூட்டணி அமைப்பு குறித்து பரபரப்பான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் தான் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். “அதிமுக கூட்டணியிலா? அப்படி ஒரு கூட்டணி இருக்கிறதா?” என அவர் கிண்டலுடன் பதிலளித்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
மேலும், விஜய்யின் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாடு மிகச் சிறப்பாக இருந்தது என்றும், அது ஒரு எழுச்சியூட்டும் நிகழ்வாக அமைந்தது என்றும் அவர் பாராட்டினார். ‘அங்கிள்’ என கூறியது தவறு என்றால், ‘டாடி’, ‘BRO’ என குறிப்பிடுவது சரியா எனக் கேள்வி எழுப்பிய அவர், இது போன்ற சொற்களை அரசியல் விமர்சனமாகப் பயன்படுத்துவது சரியல்ல எனத் தெரிவித்துள்ளார். தற்போது அதிமுக கூட்டணியில் இல்லாத புதிய தமிழகம் கட்சி, வரவிருக்கும் தேர்தலில் தவெகவுடன் இணையலாம் எனும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
