விரைவில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
நேற்று மதியம் மட்டும் அதிமுகவில் 500-க்கும் மேற்பட்டோர் இணைந்த நிலையில், அதே நள்ளிரவில் திமுகவில் 300-க்கும் அதிகமானோர் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பகுதிச் செயலாளர்கள் சிலரும் தங்கள் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர்.
இந்த இணைப்பு விழா திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையில் நடைபெற்றது. அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையை வலுப்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்திலும் நடைபெற்ற இந்த நிகழ்வு, எதிர்க்கட்சியினரிடையே கவனத்தை பெற்றுள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் தற்போது புதியோர் சேர்க்கையில் தீவீரமாக செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முன்னேற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, முன்னாள் அதிமுக ஒன்றிய குழு தலைவர் திரு. பாலமுருகன் ஏற்பாட்டில், வாங்கல் ஈ.வெ.ரா தெரு பகுதியை சேர்ந்த 75 நபர்கள், காதப்பாறை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமதி. கஸ்தூரி… pic.twitter.com/puS1WGIw6R
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) August 24, 2025
“>
