சென்னையில் நடைபெற்ற விழாவில் “ரிலீஸ் தேதியுடன் அதிரடியாக மதராஸி டிரைலர்” வெளியிடப்பட்டது.
தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘மதராஸி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது அவரின் 23-வது படமாகும். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Here’s the trailer of our #Madharaasi, an action-packed entertainer arriving September 5 💥💥💥
Tamil: https://t.co/MQfYZG4v80
Telugu: https://t.co/Jxn2bbmDX1
Hindi: https://t.co/MvSV8FKpm7
Malayalam: https://t.co/ZdjMP0VncO
Kannada: https://t.co/73Cn83n4Nu… pic.twitter.com/UzzFQrWfuY
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 24, 2025
“>
பட வெளியீட்டுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களிடம் ஆவலை கூட்டும் வகையில், ‘மதராஸி’ திரைப்படத்தின் டிரெய்லர் சென்னையில் நடைபெற்ற விழாவில், இரவு 7 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு டிரெய்லர் காட்சிகள் மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
