சினிமாவை விட்டு அரசியலுக்கு பூரணமாக மாறிவிட்ட நடிகர் விஜய், தனது கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை பொங்கல் வெளியீடாக படக்குழு திட்டமிட்டு உள்ளது.
இத்திரைப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாகும் என்பதால், இசை வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த இசை விழா மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விழாவிற்கு திரையுலக முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்டோரை விஜய் நேரடியாக அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் – அஜித் இடையே நீண்ட நாட்களாக எந்தப் பொதுவிழாவிலும் ஒரே மேடையில் தோன்றாத சூழ்நிலையில், இந்த அழைப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயின் கடைசி பட விழா என்பதாலும், அவர் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள சூழ்நிலையாலும், இவ்விழா மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
