தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், முன்னாள் பாடி பில்டரும், அரசியல்வாதியுமான சரத்குமார், 71 வயதாகியும் இன்னும் தனது உடல் கட்டமைப்பை சிறப்பாக பராமரித்து வருகிறார். சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிற அவர், தற்போது தனது பிட்னஸ் பயணத்தையும் ரசிகர்களுடன் பகிர ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் Back Muscle வலுப்படுத்தும் ஜிம் பயிற்சியின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி, அவரது உடல்வாகு மற்றும் உற்சாகத்திற்கு பரிசாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

சரத்குமார், 1974-ஆம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி பட்டம் வென்ற பாடி பில்டர் என்பது குறித்த தகவலை பலருக்கு தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் அவரது தற்போதைய உடல் கட்டமைப்பு, அந்த காலத்தையும் மிஞ்சி உள்ளது என்று பலரும் தெரிவிக்கின்றனர். சினிமாவில் அவர் செய்த ஆக்ஷன் ரோல்கள் அனைத்திலும் அவரது ஃபிட்னஸ் மிகுந்த பங்களிப்பாக இருந்துள்ளது. “நாளையும் மற்றொரு வொர்க்அவுட் வீடியோவை பகிர்கிறேன்,” என அவர் கூறியுள்ளதால், இனிமேலும் சரத்குமாரின் ஜிம் பயிற்சி வீடியோக்கள் தொடரவுள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டே அவர் ‘நெசிப்பாயா’, ‘நிலவுக்கு என் மேலென்னடி கோபம்’, ‘3 BHK’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜயந்தி’, ‘கண்ணப்பா’ போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இதனுடன், அவர் நடித்துள்ள அடங்காதே திரைப்படம் ஆகஸ்ட் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.