இந்தி மற்றும் தமிழ் மொழிகளைச் சுற்றி நாடு முழுவதும் விவாதம் தீவிரமாக இருக்கும் நிலையில், ஒரு தமிழ் விமானியின் செயல் சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இண்டிகோ விமானத்தில் பணியாற்றும் விமானி பிரதீப் கிருஷ்ணன், தனது பயணிகளிடம் தட்டுத்தடுமாறி  இந்தியில் (Broken Hindi) பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. “என் இந்தி அழகாக இருக்கும்… எல்லோரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்” என புன்னகையுடன் பேசும் அவரது நெஞ்சை தொடும் நடத்தை பயணிகளின் மனதில் ஒரு இனிய இடம் பிடித்துள்ளது. இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் மிகவும் நேர்மறையான எண்ணங்களுடன் வலம்வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், பிரதீப் கிருஷ்ணன் தனது சொந்த மொழி தேர்ச்சி இல்லாமலே செயற்கையான சைகைகளால் பயணிகளிடம் விளக்கம் அளிக்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது மனதார உணர்வுடன் கூடியவை என்பதுதான் பார்ப்போரின் இதயத்தை நெகிழ வைத்துள்ளது.

“>

 

“மொழி என்பது ஒரு தடையல்ல… உணர்வுகளின் பாலம் தான்” என்ற உண்மையை இந்த வீடியோ உலகத்திற்கே எடுத்துச் சொல்கிறது. பயணிகள் மட்டுமல்லாது, நெட்டிசன்களும் விமானியின் அன்பான இணக்கமான  முயற்சிக்கு தங்களது பாராட்டுக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விமானியின் செயல் குறித்து ஒருவர், “எல்லா மொழிகளும் அழகு தான்… அவற்றை இணைக்கும் இதயம் இருந்தால் சரி” எனக் கூறியுள்ளார். மற்றொருவர், “இந்தி பேச முடியாதவர் இதயம் வைத்துப் பேசுகிறார்… அதுதான் உண்மையான ஒருமைப்பாடு” எனக் கமெண்ட் செய்துள்ளார்.

அரசியல் மற்றும் மொழி மோதல்களால் கலங்கிய நாடு, இந்த தமிழர் விமானியின் மனிதநேய அணுகுமுறையால் ஒருங்கிணைந்த தேசிய உணர்வை மீண்டும் அனுபவிக்கிறது என்பதுதான் இந்த வீடியோவின் உண்மையான வெற்றி.