இமாச்சலப்பிரதேசம் மண்டி மாவட்டத்தில் உள்ள சவுகார்காட் பகுதியில் நடந்த ஒரு மனிதநேய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிகாரில் அரசு நர்ஸாக பணியாற்றும் கமலா என்ற பெண், மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்றை கடந்தும் தனது கடமையை தவறாமல் செய்துள்ளார். அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு தாய், தனது 2 மாத குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டி இருந்த நிலையில், மருத்துவ வசதிகள் இல்லாத அந்த மலைக்கிராமத்திற்கு நர்ஸ் வந்து சேர வேண்டியது மிகவும் சிரமமான சூழ்நிலையாய் இருந்தது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையை சுமந்துகொண்டு, கமலா காட்டாற்றை உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கடந்தார். வெள்ளம் வெறித்தனமாக ஓடும் இடங்களில், பாறைகள் மீது துள்ளிக்குதித்து அவர் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
हिमाचल प्रदेश: स्वास्थ्य कार्यकर्ता कमला देवी ने अदम्य साहस का परिचय देते हुए लगाई जान की बाजी
◆ दो माह के शिशु के टीकाकरण के लिए उन्होंने उफनती स्वाड खड्ड को जोखिम उठाकर पार किया#Mandi #Himachal #HealthWorker #VaccinationDrive pic.twitter.com/3OEB0eeFf1
— News24 (@news24tvchannel) August 23, 2025
“>
அவரது கடமை உணர்வு மற்றும் சேவை மனப்பான்மை அனைவரையும் நெகிழ வைத்துள்ளதுடன், சமூக வலைதளங்களில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.
