உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா, ரூப்பாஸ் பகுதியில் வரதட்சணை கொடுமைக்கு பலியான இளம் பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட நிகழ்வு, இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன 28 வயதான நிக்கி என்ற பெண் மீது , கணவன், மாமியார் இருவரும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால், 28 வயதான நிக்கி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த கொடூரம் நடந்து கொண்டிருக்கும்போது, அவரது 5 வயது மகன் அந்த நிலையைக் நேரில் கண்டு கண்கலங்கிக் காத்திருக்க வேண்டும் என்கிற சோகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
इस बच्चे के सामने इसकी माँ को ज़िंदा जला कर मार डाला इसके बाप ने , केवल दहेज के लिए 🥺
ग्रेटर नोएडा में पायला भाटी को उसके पति ने ज़िंदा जला कर मार डाला उसके बच्चे के सामने , मासूम को सुनिए आपका कलेजा फट जाएगा 🥹#Noida #GreaterNoida #noidapolice pic.twitter.com/x4XdBVVOoA
— Mahender Mahi (@MahendrMahii) August 23, 2025
“>
“அப்பா தாயை அடிச்சாரு… பிறகு தீ வச்சாரு…” – குழந்தையின் வாக்குமூலம் பகீர்
தாய் உயிருடன் எரியும்போது, அந்தக் குழந்தையின் முன்னிலையில் நடந்த கொடூரத்தை நினைத்தாலே மனது உருகுகின்றது. “அப்பா முதல்ல அம்மாவை அடிச்சாரு… பிறகு லைட்டரா எடுத்து தீ வச்சாரு…” என அந்த சிறுவன் அளித்த வாக்குமூலம், சம்பவத்தின் கொடூரத்தையும், மனதை நெகிழ வைக்கும் துயரத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்த சம்பவம் நடக்கும் நேரத்தில் நிக்கியின் சகோதரி காஞ்சனா வீடியோ பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
#नोएडा दहेज लोभियों ने पेट्रोल डालकर घर की बहू निक्की को जलाया
पति विपिन व सास अक्सर करते थे लड़की के साथ मारपीट
2016 में सिरसा के ग्रेटर नोएडा में हुई थी लड़की की शादी
रूपबास के दादरी की रहने वाली है निक्की #noida #upnews pic.twitter.com/P0UWssgeyR— Punjab Kesari-UP/UK (@UPkesari) August 23, 2025
“>
35 லட்சம் வரதட்சணை அழுத்தம் – குடும்பமுழுதும் கொடூரத் திட்டம்!
நிக்கி கடந்த 2016ஆம் ஆண்டு விபின் பாட்டி என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். தன் சகோதரி காஞ்சனாவும் அதே வீட்டில் மற்றொரு குடும்ப உறுப்பினரை திருமணம் செய்திருந்தார், ஆரம்பத்தில் குடும்ப உறவுகள் நன்கு போய்க்கொண்டிருந்தது.
ஆனால், சில ஆண்டுகளில் விபின் மதுபழக்கத்தில் மூழ்கி, நிக்கியை அடிக்கடி தாக்கவும் தொடங்கியுள்ளார். மேலும், மாமியாருடன் சேர்ந்து, நிக்கியின் பெற்றோரிடம் இருந்து ₹35 லட்சம் வரதட்சணையாகக் கொண்டு வருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். நிக்கி மறுத்ததற்காகவே, திட்டமிட்டு பெட்ரோல் ஊற்றி, உயிருடன் எரித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக நிக்கியின் சகோதரி போலீசில் புகார் அளித்த நிலையில், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
