மகாராஷ்டிராவின் நாஷிக் மாவட்டத்தில் அரியதும் அதிர்ச்சிகரமானதுமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிபாத் தாலுக்காவிலுள்ள கங்குர்டே வஸ்தி பகுதியில் சில தெருநாய்கள் உலாவிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு சிறுத்தை அங்கு புகுந்து நாய்களை துரத்தத் தொடங்கியது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக, அந்த சிறுத்தையை ஒரு தெருநாய் நேரில் எதிர்கொண்டு வாய் பகுதியை கடித்து கவ்வி கொண்டது. தொடர்ந்து, அந்த நாய், சிறுத்தையை சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.

 

இந்த தெருநாய் காட்டிய தைரியம் நெட்டிசன்களை பதைபதைக்க வைத்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுத்தை படுகாயம் அடைந்த நிலையில் வனத்துறை அதனை மீட்டு சிகிச்சை அளித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோ வெளியான பின்னர், தெருநாய்களின் ஆக்கிரமிப்பு குறித்து மீண்டும் சீரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் தெருநாய்கள் பொதுமக்களை தாக்கி, சிலர் உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதையடுத்து, உச்சநீதிமன்றம் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், இப்போது சிறுத்தையையே தாக்கும் அளவுக்கு தெருநாய்களின் தாக்கம் அதிகரித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.