தமிழகத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு மற்றும் இயற்கை மரணத்திற்கான நிதி உதவி தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி வேளாண் தொழிலாளர்களின் நலன் கருதி, விபத்து மரணத்திற்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வேளாண் தொழிலார்களின் குடும்பத்திற்கு ஒரு நல்ல திட்டமாகும்.
இயற்கை மரணத்திற்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.20,000லிருந்து ரூ.30,000 ஆகவும், இறுதிச்சடங்கு செலவுகளுக்கான நிதி உதவி ரூ.2,500லிருந்து ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வு, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் மற்றும் இறுதிச்சடங்கு செலவுகளை எளிதாக்குவதற்கு உதவும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
