மதுரையில் நேற்று நடைபெற்ற தவெக கட்சி மாநில மாநாட்டில் தளபதி விஜய் தலைமையேற்று பேசினார். சுமார் 2 லட்சம் பேரை கடந்த தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர் என கூறப்படுகிறது.

மாநாட்டின் முக்கிய தருணங்களில் ஒன்றாக, விஜய் தனது ரேம்ப் வாக் நேரத்தில் மக்கள் கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது பெரும் வைரலானது. இதனையடுத்து, சில மணி நேரத்திற்கு முன்பு, அந்த பிரமாண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது அதிகாரப்பூர்வ X  பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விழாவின் மகத்துவத்தையும் ரசிகர்களின் உற்சாகத்தையும் மிகச்சிறப்பாக பதிவு செய்த அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

“>