தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரை பாரபத்தி பகுதியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டில் கடை வைப்பதற்கு தவெக நிர்வாகிகள் வியாபாரிகளிடம் 5,000 ரூபாய் கேட்பதாக ஒரு வியாபாரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை எந்த அரசியல் மாநாட்டிலும் கடை வைப்பதற்கு பணம் கேட்கப்படவில்லை என்றும், இந்த முறை மட்டும் 5,000 ரூபாய் செலுத்த வேண்டும் இல்லையென்றால் கடை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், பணம் செலுத்த மறுத்தால், போலீசை அழைத்து வியாபாரிகளை அடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அந்த வியாபாரி தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு மாநாட்டின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் இது குறித்து தவெக நிர்வாகிகள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.