கன்னியாகுமாரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பயங்குளம் கல்பருத்திவிளை பகுதியில் அனில், சிந்து(25) என்று தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 18-ம் தேதி வீட்டில் இருந்த சிந்து திடீரென விஷம் கொடுத்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது மகள் சிந்துவுக்கும், அணிலுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவரது மாமியார் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிந்துவின் கணவர் மற்றும் அவரது தாயார் கலா, அனிலின் சகோதரர் அனு ஆகியோரை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
