முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்த ரூ.249 ரீசார்ஜ் பிளானை திடீரென நீக்கியுள்ளது. இந்த பிளான் தான் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கிய ஒரே பேக். இதனால் தற்போது ஜியோவின் ப்ரீபெய்ட் சேவையில் டெய்லி 1ஜிபி டேட்டா பிளான் கிடையாது. இந்நிலையில், ரூ.299 (1.5GB/Day) பிளான் தான் ஜியோவின் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் பிளானாக மாறியுள்ளது.
எனினும், ரூ.249 பிளானை விடக் குறைவான விலையில் ரூ.189, ரூ.198 மற்றும் ரூ.239 ரீசார்ஜ் பிளான்கள் இன்னும் கிடைக்கின்றன. ஆனால் இவை குறைந்த வேலிடிட்டியுடன் மட்டுமே வருகின்றன. பல மாதங்களாக ஜியோ கஸ்டமர்களின் பிரபலமான தேர்வாக இருந்த ரூ.249 பிளான் நீக்கப்பட்டதால், பயனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு மாற்றாக ஜியோ நிறுவனம் புதிய 1ஜிபி டேட்டா பிளான் ஒன்றை அறிமுகப்படுத்துமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
