திரை உலகில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவாக ரகசியமாகவே வைத்துக்கொள்ளப்படும். குறிப்பாக, நடிகைகள் தங்களுக்குள் இருக்கும் பழக்கங்களை வெளிப்படையாகப் பகிர்வது மிகவும் அபூர்வம். ஆனால், ‘வாத்தி’ படம் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய ஒரு கெட்ட பழக்கத்தை நேர்மையாக கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

அந்த பேட்டியில், “எனக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருக்கிறது. அது தினம் ட்ரிங்க் மாதிரி கிடையாது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களில் அல்லது பதட்டமான சூழ்நிலைகளில் தான் குடிப்பேன். அது ஒரு கொடுமைதான், ஆனால் சில சமயங்களில் அது மனதை அமைதியாக்கும். இது எனக்கே தேவையா என எண்ணும் தருணங்களும் வரும்,” என தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த நேர்மையான பகிர்வு, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.