மது அருந்துபவர்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனையாக, குடித்துவிட்டு வீடு திரும்பும்போது வாசனையால் குடும்பத்திலும், சோதனையில் போலீசிலும் சிக்கிக் கொள்வது வழக்கம். இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தற்போது நறுமணம் வீசும் மதுபானங்கள் அறிமுகமாகியுள்ளன.

இதுவரை திராட்சை, பார்லி போன்றவற்றிலிருந்து ஆல்கஹால் தயாரிக்கப்பட்ட நிலையில், இப்போது பூக்கள் மற்றும் பழங்களிலிருந்தும் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. மல்லிகை, லாவெண்டர், ரோஜா, மாண்டரின், செர்ரி போன்ற பூக்களிலிருந்து ஜின் தயாரிக்கப்படுகிறது. அதேபோல், மாம்பழம், அன்னாசி, பலாப்பழம், தர்பூசணி, தக்காளி, பீட்ரூட், கேரட் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்தும் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது. இவை இயற்கையான நறுமணத்தை இழக்காமல் இருக்கும் என்பதே சிறப்பு. இதனால் குடிப்பவர்களுக்கு மது வாசனை வெளிப்படாது, மாறாக பூக்கள் மற்றும் பழங்களின் மணமே வீசும்.

ஏற்கனவே இங்கிலாந்து, ஜப்பான், ஸ்காட்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் இந்த வகை மதுபானங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தக்காளி வோட்கா ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் பிரபலமானது; மாம்பழ ஆல்கஹால் இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்தில் விற்பனையாகிறது. அன்னாசி பானம் பிரேசில் மற்றும் ஹவாயில், பலாப்பழ பானம் கேரளா மற்றும் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தர்பூசணி பானம் அமெரிக்கா, மெக்சிகோவில் கோடைகாலத்தில் ஹிட்டான பானமாக உள்ளது. விரைவில் தெலுங்கானா மாநிலத்திலும் இந்த நறுமண மதுபானங்கள் அறிமுகமாக உள்ளன. குடிப்பவர்களை போலீஸ் சிக்கல்களில் இருந்து காப்பாற்றும் வகையில், இந்த நவீன மதுபானங்கள் மது பிரியர்களுக்கு புதிய அனுபவமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.