மத்திய அரசு நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வருடாந்திர பாஸ்டேக் முறையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் படி சுங்க சாவடிகளில் வருடாந்திர பாஸ்டேக் இன்று முதல் அமலானது. இதன் மூலம் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் அல்லது 200 டிரிப்கள் வரை பயணிக்கலாம்.

எனவே தனியாக சுங்க கட்டணம் செலுத்த அவசியமில்லை. கார், ஜீப், வேன்கள் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டும் இந்த திட்டம் பொருந்தும்.