ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், இந்தியாவைப் பற்றி ஆத்திரமூட்டும் வகையில் பேசி வருகிறார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் தவறான கருத்துகளைப் பரப்பினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து போர் வெறியையும், வெறுப்புக் கருத்துகளையும் பரப்பி வருவது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. தங்களது தோல்விகளை மறைப்பதற்காக பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது. எந்தவொரு தவறான செயலும் வலிமிகுந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் உணர வேண்டும்,” என்றார்.
