இன்று நாடு முழுவதும் 79 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி 12 வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

அதன் பின் தமிழ்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பலருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறார். இதனால் புனித ஜார்ஜ் கோட்டையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 9000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேசிய அவர் கூறியதாவது, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான தமிழ்நாட்டு அரசின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் 12000 ஆக உயரும் என்றும் கூறியுள்ளார்.