ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 இந்தியர்களுக்கு மறக்க முடியாத நாள். 1947 ஆம் ஆண்டு இந்த நாளில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால், சுவாரஸ்யமாக, இந்தியாவைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 நாடுகளும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியிலேயே தங்கள் சுதந்திரத்தை நினைவுகூர்கின்றன. வெவ்வேறு வருடங்களில், வெவ்வேறு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்று, இந்த நாடுகள் இன்று தங்கள் தேசிய தினமாக இதே தேதியை கொண்டாடி வருகின்றன.

1. பஹ்ரைன்

பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடு பஹ்ரைன். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து வந்த பஹ்ரைன், 15 ஆகஸ்ட் 1971 அன்று அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்றது. ஐ.நா. கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடுதலை அறிவிக்கப்பட்டது. அணிவகுப்புகள், வானவேடிக்கை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தி பஹ்ரைன் மக்கள் இன்று வரை தேசிய தினத்தை கொண்டாடுகின்றனர்.

2. கொரியா (வட மற்றும் தென்)

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ஆக்கிரமித்திருந்த கொரிய தீபகற்பம், 15 ஆகஸ்ட் 1945 அன்று அமெரிக்கா மற்றும் சோவியத் படைகளின் தலையீட்டால் விடுதலை பெற்றது. பின்னர், 15 ஆகஸ்ட் 1948 அன்று கொரியாவில் தனித்தனி அரசுகள் உருவாக்கப்பட்டன. தென் கொரியாவில் இதை “Gwangbokjeol” எனவும், வட கொரியாவில் “Chogukhaebangui nal” எனவும் அழைத்து, பெரும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

3. காங்கோ

ஆப்பிரிக்காவின் முக்கிய நாடான காங்கோ, பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுமார் 80 ஆண்டுகள் இருந்தது. இறுதியில், 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரான்சிடம் இருந்து முழுமையான சுதந்திரம் பெற்றது. இது “காங்கோ தேசிய தினம்” என அழைக்கப்பட்டு இன்று வரை பெருமையுடன் நினைவுகூரப்படுகிறது.

4. லிச்சென்ஸ்டைன்

மத்திய ஐரோப்பாவில் அமைந்துள்ள சிறிய நாடான லிச்சென்ஸ்டைன், உலகின் ஆறாவது சிறிய நாடாகும். இந்த நாடு 1866ஆம் ஆண்டு ஜெர்மன் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி லிச்சென்ஸ்டைன் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதனால், ஆகஸ்ட் 15 என்பது இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.