சமூக வலைதளங்களில் தினமும் பல அதிர்ச்சி தரும் வனவிலங்கு வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு வீடியோவில், பிரபல மலைப்பாம்பு வேட்டைக்காரர் கெவ் பாவ் (Kev Bao) மீது பாம்பு கடுமையாகத் தாக்கினாலும் அவர் பயப்படாமல் சிரித்துக் கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கெவ் பாவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @snakeaholic-இல் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பெரிய மலைப்பாம்பைப் பிடிக்க முயன்றபோது திடீரென அது அவரைத் தாக்கி இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. அந்த தருணத்தில் கூட கெவ் சிரித்துக் கொண்டிருப்பது காணொளியில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அவர், “நான் எப்போதும் விழிப்புடன் இருப்பேன். சரியாக கையாளவில்லை என்றால், பாம்பு என் முகத்தையே தாக்கியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kev Pav (@snakeaholic)

“>

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 50 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து, “இத்தகைய சூழ்நிலையில் ஒருவர் சிரிக்க முடிகிறதா?” என கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், “பாம்பு சுடப்படுமா?” “அதை கத்தியால் வெட்ட முடியுமா?” என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். இதற்கு கெவ், “அப்படிச் செய்வது சரியல்ல” என்று பதிலளித்தார். இந்த அதிர்ச்சி தரும் வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.