சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக வைரலாகி வரும் வீடியோவில், ஒரு திருடன் டெக்னிக்  முறையை பயன்படுத்தி, பூட்டை எவ்வாறு சத்தமே இல்லாமல் திறக்க முடியும் என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.

இதைப் பார்த்த மக்கள், “இப்படியும்  திருட்டு நடக்குமா?” என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று திருடர்கள் பலர் உயர் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தினாலும், சிலர் எளியஅறிவு சார்ந்த  வழிகளைப் பயன்படுத்தி மக்களின் வீடுகளை குறிவைக்கிறார்கள் என்பது இந்த வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த காட்சியில், திருடன் கையில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட சிரிஞ்சுடன் பூட்டுக்கு அருகில் அமர்ந்திருப்பதை காணலாம். பின்னர் அதை பூட்டின் ஓட்டையில் ஊற்றி, லைட்டர் மூலம் தீப்பற்றி விடுகிறார். அதனால் பூட்டின் பிளாஸ்டிக் அடுக்கு உருகி, வெறும் ஒரு இழுப்பிலேயே பூட்டு திறந்து விடுகிறது. இந்த எளிய யுக்தியை பார்த்த மக்கள், தங்கள் வீட்டின் பாதுகாப்பு குறித்து அதிகமாக கவலைப்பட தொடங்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Flirting Lines (@flirting.lines)

“>

இந்த வீடியோவை flirting.lines என்ற இன்ஸ்டா கணக்கு வெளியிட்டுள்ளது. சில நொடிகளில் பரவலாக பகிரப்பட்டதால், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. அதனுடன் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். “இதை பார்த்த பிறகு, என் வீட்டில் உள்ள பூட்டுகளைப் பற்றி பயமாக இருக்கிறது” என ஒருவர் கருத்து தெரிவித்தார். மற்றொருவர், “ஜுகாத் முறையில்கூட திருடர்கள் இவ்வளவு புத்திசாலிகளாகிவிட்டார்களா?” என்று ஆச்சரியமாக பதிவிட்டுள்ளார்.