சென்னை மாவட்டத்தில் 14 வயது சிறுமியை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று 4 பேர் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கேரளா நடிகை மினு முனீரை கைது செய்துள்ளனர். அவர் கேரளாவில் இருந்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும் அது குறித்து பாதிக்கப்பட்ட நபர் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த சிறுமியை ஏமாற்றியது சென்னையில் என்பதால் மினு சென்னைக்கு வரவழைக்கப்பட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சினிமாக்கள் மூலமாக மக்களிடையே பிரபலமடைந்தவர் மினு என்பது குறிப்பிடத்தக்கது.
