லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அமீர்கான், நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கூலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரீ டிக்கெட் புக்கிங்கில் நூறு கோடி ரூபாய் வரை வசூல் செய்த கூலி திரைப்படம் இனிவரும் நாட்களில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூலி திரைப்படம் முதல் நாளான நேற்று உலகம் முழுவதும் 151 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.