தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் அனிருத் ரவிச்சந்தர். சமீபத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் அவரது இசை, பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த ஹிட் இசையமைப்பாளர், அடிக்கடி காதல் வதந்திகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது வழக்கம். ஒரு பிரபலத்துடன் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக சமீபத்தில் பரபரப்பான தகவல்களும் வெளியானது.

இந்நிலையில், அனிருத்தின் திருமணம் குறித்த கேள்விக்கு அவரது தந்தையும் நடிகருமான ரவிசந்தர் ராகவேந்தர் பதிலளித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “அனிருத்துக்கு திருமணம் எப்போது?” என கேட்கப்பட்ட கேள்விக்கு, “எனக்கே தெரியவில்லை. நான் உங்களிடம் தான் கேட்கலாம் என நினைத்திருந்தேன். உங்களுக்குத் தெரிந்தால் எனக்குத் தெரிவியுங்கள்!” என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

மேலும் தற்போது 34 வயதாகும் அனிருத், வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.