டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணை அவரது தோழி ஒருவர் மற்றொரு ஆண் நண்பரின் வீட்டு பார்ட்டிக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. அங்கு வைத்து இளம் பெண்ணுக்கு மதுவில் போதை பொருள் கலந்து கொடுத்தனர். அதனை குடித்து மயங்கி விழுந்த இளம் பெண்ணை ஆண்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

லேசாக மயக்கம் தெளிந்து கண்விழித்த இளம் பெண்ணிடம் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். அங்கிருந்து தப்பித்து வந்த இளம்பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்துகாவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.