சென்னை: மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ், மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், அதன் பின் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார்.
தற்போது, அதிமுக தலைமைக்கு விசுவாசமாகவும், தலைமை எடுத்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க முழு முயற்சியும் எடுப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு மன்னிப்பு கடிதம் அளித்துள்ளார்.
கட்சி வட்டாரங்களில் பரவியுள்ள தகவலின்படி, அவரின் மீள்பிரவேசத்துக்கு இபிஎஸ் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நட்ராஜ், முன்னாள் சென்னை காவல் ஆணையராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
