சென்னை: நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கொடியேற்றும்போது வெடிகுண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தொழிலில் நஷ்டம் அடைந்து விரக்தியுடன் மது அருந்திய நிலையில் அவர் இந்த மிரட்டலை விடுத்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
