பெங்களூரில் ஒரு வாலிபர் கர்ப்பிணி மனைவியை கவனித்துக் கொள்வதற்காக வருடத்திற்கு 1.2 கோடி வருமானம் தரும் வேலையை ராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் ஒரு வாலிபர் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில் நான் வேலை பார்த்துக் கொண்டே ஆண்டுக்கு 1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன்.
என் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்ப்பமானார். முதலில் என் மனைவியை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக் கொள்ள நான் வேலையை விட்டு விட்டேன்.
என் வீட்டில் இருந்தபடியே மனைவியை கவனித்துக் கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும்போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என அவர் கூறியுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.. பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
