ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு சூப்பரான மற்றும் நிம்மதியான செய்தியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. இனிமேல் உங்களோட ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை (Email ID) இணைக்கவோ அல்லது புதுப்பிக்கவோ நினைத்தால், ஆதார் மையங்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கத் தேவையில்லை. இதற்கென பிரத்யேகமாக ‘ஆதார் மொபைல் செயலி’ (mAadhaar App) மூலமாகவே வீட்டிலிருந்தபடியே மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பித்துக் கொள்ளும் புதிய அதிரடி வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பம்சமே, கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்தச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதுதான். பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் தாராளமாக இந்த இலவச சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வசதியின் மூலம், மக்கள் தங்களது நேரத்தையும் அலச்சலையும் மிச்சப்படுத்தி, மிக எளிதாக மின்னஞ்சல் விவரங்களை அப்டேட் செய்து கொள்ள முடியும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
