சமீப காலங்களாக பல நாடுகளில் பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் ஊழியர்களை திடீரென பணியிடை நீக்கம் செய்கின்றனர். அதனால் வேலை இழந்த மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு வேலையின்மை ஆகியவை பலருக்கும் அதிருப்தியையும் மன அழுத்தத்தையும் தருகிறது.
இதனை கட்டுப்படுத்த சீனாவில் புதிய வழி ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். அதாவது தனக்கு வேலையில்லை என்பதை வெளி உலகத்திற்கு காட்டாமல் இருப்பதற்காக சீனாவில் உள்ள ஹேப்பி மாகாணத்தில் ஒரு அலுவலகம் ஒன்று செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 350 கொடுத்து அலுவலகத்தில் பணிபுரிவது போல் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
அதன்படி கட்டணம் செலுத்தியதும் காலை தொடங்கி மாலை வரையிலும் அந்த அலுவலகத்திலேயே இருக்கலாம். வெளியுலக உறவினர் ஆகியோருக்கு தான் தினம் தோறும் வேலை செய்துவிட்டு வருவது போல காட்டிக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக அங்கு வருவோருக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது.
அந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் நடப்பது, வேலை செய்வது போல் போட்டோ எடுக்க வேண்டும் அல்லது டீம் லீடர் போன்ற உயர் பதவிகளில் இருப்பது போல் போட்டோ எடுக்க வேண்டும் எனில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
