சீனாவில் காதலனை அடித்தே கொலை செய்த காதலிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் சேர்ந்த இளம்பெண் அஜூவான். இவர் தனது காதலனின் தவறான பழக்கங்கள் மற்றும் பொய்களை சகித்துக் கொள்ள முடியாமல் பலமுறை தன் காதலனுடன் பிரேக் அப் செய்துள்ளார்.

இருப்பினும் காதலர் தொடர்ந்து அஜூவானை தொல்லை செய்து வந்துள்ளார். மேலும் தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு அஜூவானை  குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார். இந்நிலையில் தன்னை விட்டு செல்வதற்கு பதிலாக தன்னை “அடித்தே கொன்றுவிடு” என   அஜூவானிடம் கூறியுள்ளார்.

தன்னைத் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருக்கும் காதலரை ஆத்திரத்தில் அவர் சொன்னது போல் அடித்தே கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் அஜூவானை கைது செய்துள்ளனர். அவருக்கு சீன நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது குறித்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.