ஒடிசாவின் புவனேஸ்வரியில் கடந்த வாரம் கருப்பு நிற ஸ்கார்பியோவுடன் வெள்ளை நிற தார் ஒன்று பந்தயத்தில் ஈடுபட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த தார் ரெபாட்டி ரவுல் அவரது மகள் ரேஷ்மா மற்றும் அவரது மகன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரேஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து படுகாயம் அடைந்த ரெபாட்டியும் அவரது மகனும் புவனேஸ்வரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரெபாட்டியும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
