திண்டுக்கல் மாவட்டம் தும்பலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செங்கல் சூளைக்கு சென்ற சரவணன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது காதில் ரத்தம் வடிந்த நிலையில் சரவணன் சடலமாக கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே செங்கல் சூளையில் வேலை பார்த்த 16 வயதுடைய வடமாநில சிறுமி சரவணனை அடித்து கொன்றது தெரியவந்தது. இந்த கொலையை மறைக்க சிறுமியின் தந்தை கோபால், 14 வயது சகோதரி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனை அடுத்து கோபால் மற்றும் அவரது இரண்டு மகள்களை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.