கேரளாவை சேர்ந்த மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘என்டே கேரளம் எக்ஸ்போ 2025’ல் அவர் அறிமுகப்படுத்திய “Talk to Write” எனப்படும் இந்த AI சாதனம், ஒருவர் பேசும் வார்த்தைகளை உடனடியாக காகிதத்தில் மனிதர் கையெழுத்து போல் எழுதுகிறது. Raspberry Pi, Arduino (GRBL), Python போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் CNC பேனா ப்ளாட்டரையும் பயன்படுத்தி மாணவர் ஜெய்  மற்றும் அவரது குழு இதை உருவாக்கியுள்ளனர். எழுத முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுதத் தெரியாதவர்களுக்கு உதவுவது இதன் முக்கிய நோக்கம்.

இந்த AI வாய்ஸ்-டு-பேனா அமைப்பு, பேசப்படும் வார்த்தைகளை உடனடியாக எழுத்துகளாக மாற்றி, இயந்திரம் காகிதத்தில் அழகாக பதிவு செய்கிறது. சாதனத்தின் செயல்பாடு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன், அது விரைவாக வைரலானது. இந்த கண்டுபிடிப்பு, தொழில்நுட்பமும் அறிவியலும் இணைந்து மனித வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக பலராலும் பாராட்டப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Liberty Wire (@thelibertywire)

“>

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பெருமையுடன் கருத்துகள் பகிர்ந்துள்ளனர். “நம் நாடு உண்மையில் மாறிக்கொண்டிருக்கிறது” என சிலர் பதிவு செய்ய, “நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமில்லை, அதை வெளிக்கொணர வேண்டும்” என மற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பலரின் பார்வையில், இந்த சாதனம் எதிர்காலத்தில் எழுத முடியாதோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.