மும்பை அருகே உள்ள விராரில், 17 வயது சிறுமி மீது ‘பேயோட்டுதல்’ பெயரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, பல மாதங்களுக்கு முன்பு ஒரு கோவிலில் அந்த சிறுமியை பிரேம் பாட்டீல் சந்தித்துள்ளனர். அவர்களுக்குள் நல்ல நட்பு உருவாகியுள்ளது இந்நிலையில்  பிரேம் பாட்டீல்  தனக்கு சூனியம் தெரியும் இன்று குறி நம்பவைத்துள்ளார் . குற்றவாளிகளில்  ஒருவரான பிரேம் பாட்டீல் (22) தன்னை ‘கடவுள் மனிதர்’ என்று கூறிக்கொண்டு, சிறுமியிடம் “உனக்கு தீய ஆவி பிடித்துள்ளது… அதை விரட்ட ஒரே வழி எனக்குடன் உடலுறவில் ஈடுபடுவது” எனக் கூறி வஞ்சித்துள்ளார்.

ஜூலை 30ஆம் தேதி, பிரேம் பாட்டீலும் அவரது நண்பர் கரண் பாட்டீலும் சிறுமியை விரார் ராஜோடி கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், விடுதியை விட்டு வெளியேறிய சிறுமி நடந்ததை தனது தோழியிடம் பகிர்ந்தார். அவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு வலியுறுத்தியதால், சிறுமி விரார் காவல்துறையில் முறையிட்டார்.

புகாரின் பேரில், விரார் போலீசார் பிரேம் பாட்டீல் மற்றும் கரண் பாட்டீல் இருவருக்கும் எதிராக POCSO சட்டம் 2012 மற்றும் மகாராஷ்டிரா மனித தியாகம், அகோரி நடைமுறைகள், சூனியம் தடுப்பு சட்டம் 2013 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்த போலீசார், இன்னொருவரை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.