கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரபின் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கொச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் பிரபினை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது மகளுடன் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலன் என்ற பெயரில் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்த பிரபின் அந்தப் பெண்ணின் பேரனான 14 வயது சிறுவனுக்கு போதை பொருளை பயன்படுத்த செய்து இருக்கிறார். 9-ம் வகுப்பு படித்து வந்த அவனுக்கு முதலில் கஞ்சாவை கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்த மறுத்ததால் அடித்து துன்புறுத்தி கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கஞ்சாவை பயன்படுத்த செய்து இருக்கிறார்.

பின்பு மதுபானம் மற்றும் ஹாலிஸ் ஆயில் உள்ளிட்டவைகளையும் கொடுத்துள்ளார். இந்த போதை பொருட்களை பயன்படுத்துவதால் தேவையில்லாமல் அதிகமாக கோபப்படுதல் உள்ளிட்ட செயல்களில் சிறுவன் ஈடுபட்டு இருக்கிறார். தனால் சந்தேகமடைந்த சிறுவனின் தாய் அவரிடம் கேட்டபோது பாட்டியின் காதலன் வலுக்கட்டாயப்படுத்தி தனக்கு போதை பொருளை கொடுத்து வந்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அலெக்ஸாண்டரை கைது செய்தனர்.