இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது சிராஜ். இவர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற முடித்த ஆண்டவர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டிகளிலும் ஓய்வின்றி விளையாடியது மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே 185 ஓவர்களை வீசி 23 விக்கட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாக இருந்தார்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய சிராஜ்க்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்தார். கடந்த 2018ம் ஆண்டு சிராஜுக்கு மோசமான IPL தொடராக இருந்தது. அதன்பிறகு சிராஜின் திறனை கவனித்த விராட் கோலி அவரை ஆதரித்து RCB அணியில் வாய்ப்பு வழங்கியதோடு இந்திய அணிக்கும் கொண்டு வந்தார். எனவே சிராஜ்-க்கு எப்போதுமே விராட் கோலி மூத்த சகோதரர் போன்றவர்.

அவரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று சிராஜ் கையாள்கிறார். ஆனால் அவரிடம் இருந்து கோவம் மற்றும் வெறியை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. உடற்தகுதியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். இந்நிலையில் விராட் கோலி கையொப்பமிட்ட அவரது ஜெர்சியை சிராஜ் தனது வீட்டின் சுவற்றில் பிரேம் செய்து மாட்டியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த ஜெர்சி 2024- 25 பார்டர் காவஸ்கர் டிராபியின் போது சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடைசி டெஸ்ட் போட்டியை நினைவுகூரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
