குரோஷியா மற்றும் சைப்ரஸ் அணிகள் இடையிலான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி, குரோஷியாவின் தலைநகர் ஜாக்ரெப்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில், 17 வயதான ஜாக் உகுசிச் குரோஷியா அணியின் கேப்டனாக அறிமுகமாகி, சர்வதேச மட்டத்தில் மிக இளம் வயதில் அணியை வழிநடத்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு, 2022-ஆம் ஆண்டு பிரான்ஸ் அணியின் நோமன் அம்ஜத் தனது 18-வது வயதில் கேப்டனாக இருந்ததே சாதனையாக இருந்தது.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சைப்ரஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை எதிர்கொண்ட குரோஷியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அணியின் இளம் கேப்டன் ஜாக் உகுசிச், 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.