ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு மைக் செட்டுகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் மைக் செட் உரிமையாளர் வீரக்குமார் என்பவர் வீட்டின் வெளியே பெரிய அளவிலான ஸ்பீக்கர்களை அடக்கி வைத்துள்ளார்.

அதன் கயிற்றை அவிழ்த்த சுகவதி என்று சிறுமி அவிழ்த்துள்ளார். இதனால் ஸ்பீக்கர்கள் குழந்தையின் மீது விழுந்தது. இதில் சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்பீக்கர் விழுந்ததில் 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.