இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/DKpGyFVsnb1/?igsh=MWVrazd3eWMyenJxZw%3D%3D

அதாவது அந்த வீடியோவில் நத்தையை குறித்து ஒருவர் ஒரு செய்தியை கூறியுள்ளார். அதாவது நத்தை இனப்பெருக்கம் செய்யும் போது அதன் உறுப்புகளை வெட்டுகின்றனார். இது பார்ப்பதற்கு கொடூரமாக தெரிந்தாலும் இதெல்லாம் கோல்டன் ஆப்பிள் நத்தை என்று அழைக்கப்படும் ஒருவகையான நத்தை ஆகும். அதிகமாக வயல்வெளிகளில் வாழும் இந்த நத்தைகள் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றது.

இந்த நத்தைகள் வயல்களில் இருக்கும் இளம் பயிர்களை தான் உணவாக சாப்பிடுகின்றது. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் எங்கு இந்த நத்தை முட்டைகளை பார்த்தாலும் அதனை அழிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.