சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘நோ பார்க்கிங்’ பகுதியில் ஸ்கூட்டியை நிறுத்தியதால், போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, அந்த பெண் குழந்தையைப் போல அழுது நாடகம் ஆடியது, பார்வையாளர்களையும், காவல் ஆய்வாளரையும் சிரிக்க வைத்தது.
வீடியோவில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல பைக்குகள் மற்றும் ஸ்கூட்டிகளை, போலீஸ் வாகனத்தில் ஏற்றி எடுத்துச் செல்லும் காட்சி தெரிகிறது. அப்போது, அந்தப் பெண்ணின் ஸ்கூட்டியும் ஏற்றப்பட்டிருந்தது.
इंसानियत ज़िंदा है
pic.twitter.com/pGXJ41N23x— Anju choudhary (@AnjuJhang) August 7, 2025
இதைப் பார்த்தவுடன், அவள் வாகனத்தை நோக்கி ஓடி, சத்தமாக அழத் தொடங்கினாள். பின்னர், தனது ஸ்கூட்டியைப் பிடித்து, தன்னை விடுவிக்குமாறு போலீசாரிடம் கெஞ்சினாள். அருகில் இருந்த தோழி அமைதிப்படுத்த முயன்றாலும், அந்த பெண் கேட்க மறுத்தார்.
இந்த காட்சியைப் பார்த்த இன்ஸ்பெக்டர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே, டிரைவரை வாகனத்தை முன்னோக்கி செல்லச் சைகை காட்டினார். ஆனால் பெண் ஸ்கூட்டியை விடாமல் பிடித்து நின்றதால், இறுதியில் போலீசார் மனம் உருகி, ஸ்கூட்டியைத் திருப்பி அளித்தனர்.
@AnjuJhang பகிர்ந்த இந்த வீடியோ, 2.69 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், சிலர் “பெண்கள் விஷயத்தில் மட்டுமே மனிதநேயம் உயிருடன் இருக்கிறது” என கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளனர்.
