ரக்ஷா பந்தன் பண்டிகை நெருங்கி வருவதால் சந்தைகள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், டெல்லி சதார் பஜாரில் உள்ள ஒரு மொத்த ராக்கி விற்பனையாளரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில், கடைக்காரர் ₹2 மட்டுமே மதிப்புள்ள ஒரு சாதாரண ராக்கியை, பேக்கேஜிங் முறைமையை மாற்றுவதன் மூலம் ₹10, ₹50, ஏன் ₹100க்கும் விற்க முடியும் என்று வெளிப்படையாக கூறுகிறார்.
View this post on Instagram
வீடியோவில், அவர் பல்வேறு வகையான பேக்கேஜிங்குகளை காட்டி, “ஒரு சாதாரண பிளாஸ்டிக் பாக்கெட்டில் இருக்கும் ராக்கி ₹2, அதை ஒரு எளிய பிளாஸ்டிக் பெட்டியில் வைத்தால் ₹10, ஆடம்பரமான பெட்டியில் வைத்தால் ₹50, மேலும் பிரமாண்டமான பெட்டியில் வைத்தால் ₹100க்கும் மேல் விற்கலாம்” என்று விளக்குகிறார். “வாடிக்கையாளர்கள் ராக்கியின் தரத்தை விட, அதன் பேக்கேஜிங் கவர்ச்சியாக இருந்தால் அதிகம் பணம் கொடுக்க தயார்” என அவர் கூறுகிறார்.
இந்த வீடியோவை @jasveersinghvlogs என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பார்த்து கருத்துகளை பகிர்ந்துள்ளனர். சிலர் இதை வணிகத் தந்திரமாகக் கருதினாலும், பலர் “இது வியாபாரம் அல்ல, தந்திரம்” என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“பேக்கேஜிங் ராஜா” என கிண்டல் செய்தவர்களும், “வாடிக்கையாளர்களும் ரீல்களைப் பார்க்கிறார்கள் என்பதை கடைக்காரருக்கு சொல்லுங்கள்” என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்..
