காரில் டயர் பஞ்சர் ஆனதை தொடர்ந்து, பிரணய் கபூர் என்ற நபர் அருகிலுள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். அங்கு பணியாளர், டயரை ஜாக்கில் வைத்து சோப்பு நீர் தெளித்து குமிழ்கள் வரும் படி செய்து, “நான்கு பஞ்சர்” இருப்பதாகக் கூறினார்.
ஒவ்வொரு பஞ்சருக்கும் ₹300 என மொத்தம் ₹1,200 ஆகும் என்று தெரிவித்தார். ஆனால் பிரணய் சந்தேகமடைந்து, அங்கு பழுது பார்க்காமல் நம்பகமான டயர் கடையில் மீண்டும் சோதிக்க, உண்மையில் ஒரே ஒரு பஞ்சர் மட்டுமே இருந்தது; மற்ற மூன்று துளைகள் வேண்டுமென்றே போடப்பட்டவை என்று தெரியவந்தது.
View this post on Instagram
டயர் கடை தொழில்நுட்ப நிபுணர், ஃபோர்க் போன்ற சிறப்பு கருவியை பிரணய்க்கு காட்டினார். இந்த கருவியால் டயரில் எளிதாக புதிய துளைகள் உருவாக்க முடியும். இப்படிப் பட்ட மோசடியில், டயர் முழுவதுமாக சேதமடைந்ததால், அதை மாற்ற ₹8,000 செலவாகியுள்ளதாக பிரணய் கூறினார்.
இந்த சம்பவத்தைப் பதிவு செய்த வீடியோவை பிரணய் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் பார்த்து, கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “இப்படி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது மிகவும் தவறு” என பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சொந்த லாபத்திற்காக பிறருக்கு இழப்பு ஏற்படுத்துவது சரியல்ல” என்றும் பலர் கருத்துரைத்துள்ளனர்.
