கர்நாடகா மாநிலம் கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா என்ற பகுதியில் மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாம்ராஜ் நகரை சேர்ந்த ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 20 வருடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, பலாத்காரம் செய்த பெண்களை கொன்று அவர்களின் உடல்களை கோவில் நிலத்திலேயை புதைத்துள்ளாதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கோவில் நிலத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் ஆண் ஒருவரின் எலும்புக்கூடு மற்றும் பல எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அதிகாரப் பூர்வமான தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை கூறியுள்ளார். அதில் சிறப்பு புலனாய்வு குழு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் 6-வது இடத்தில் ஒரு ஆணின் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் புதிய இடத்திலும் சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 13-வது இடத்தில் எந்த ஒரு தடயங்களும் கண்டுபிடிக்கவில்லை. இந்த விசாரணையில் அரசாங்கம் தலையிடாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி இந்த சம்பவத்தில் உள்ள உண்மையை கண்டறிய சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது என கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.
