முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் எம்.பி ஆக இருந்தவர். இவர் கடந்த ஆண்டு அவரது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் உட்பட பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவர் பலாத்காரம் செய்யும் பெண்களை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்த சுமார் 2900 வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது வீட்டில் பணிபுரிந்த 47 வயது மதிப்புமிக்க பணிப்பெண் ஒருவர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் சென்ற வாரம் அவருக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது செலுத்தப்பட்ட குற்றத்தினை நிரூபிக்க போலீசார் மேலும் ஆதாரங்களை சேகரித்து வந்தனர். எனவே பிரஜ்வல் மீது குற்றம் சாட்டப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் சம்பவத்தன்று அவர் என்ன உடை அணிந்திருந்தார் என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சேலை அணிந்திருந்ததாகவும் அதனை பிரஜ்வல் வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த சேலையை தற்போது பண்ணை வீட்டில் மறைத்து வைத்து இருக்கலாம் என அந்த பெண் விசாரணையில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் படி பிரஜ்வலின் பண்ணை வீட்டு மாடியில் போலீசார் சோதனை கொண்டனர். அங்கு அவரது அறையில் பழைய சேலை ஒன்று கிடைத்தது. அந்த சேலையை அவர் பாலியல் வன்கொடுமை செய்த பணிப்பெண்ணிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்து வைத்திருந்திருக்கிறார்.

ஆனால் அந்த ஆதாரத்தை அளிப்பதற்கு பதிலாக அதை யார் பார்க்கப் போகிறார் எந்த நம்பிக்கையில் தனது பண்ணை விட்டு மாடியில் மறைத்து வைத்திருக்கிறார். இதன் பேரில் போலீசார் பிரஜ்வல் வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு மாடியில் இந்த சேலைலையை கண்டெடுத்தனர்.

பின்பு அந்த சேலையை தடவையில் நிபுண ஆய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் அதில் விந்துவின் தடங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அதனை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி அதில் உள்ள டிஎன்ஏ – வை சோதனை செய்ததில் அது பிரஜ்வலின் டி.என்.ஏ. உடன் பொருந்தியது.

எனவே இந்த சேலையை பிரஜ்வலின் குற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் அரசு தரப்பு வழக்கினை வலுப்படுத்தி பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உதவியது.