விசாரணை மேற்கொள்ளாமல் கைதிகளை பல ஆண்டுகள்  சிறையில் வைப்பதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வல்லமை வாய்ந்தவர்கள். அவர்கள் கைது செய்யும் நபர்களிடம் சரியான விசாரணை மேற்கொள்ளாமல் நேர்மையின்றி செயல்படுவதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றிற்கு மறுசீராய்வு மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளைநேர்மையின்றி செயல்படக்கூடாது; சட்டத்தின் படி தான் செயல்பட வேண்டும் என கூறினர்.

இதுவரை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் 5000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 10-க்கும் குறைவான வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கப்பெற்றது. பொதுமக்கள் சிலரை சரியான விசாரணை மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளாகவே சிறையில் வைத்திருப்பதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனி திறமை வாய்ந்தவர்கள்.

கைது செய்யப்படும் பொதுமக்களில் சிலர் சரியான விசாரணை மேற்கொள்ளப்படாமல் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்கள் தாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற காரணம் குறித்து அறிவது அவர்களின் சுதந்திரம். இது அமலாக்கத்துறையின் நற்பெயரைஉள்ளடக்கியது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படும் சிலர்கள் சுமார் 5-6 ஆண்டுகளுக்கும் மேல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் இழந்த வருடங்களுக்கு யார் பொறுப்பு? என நீதிபதிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை மேற்கொண்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.