ராஜஸ்தானில் உள்ள பிகானீர் நகரில் சன்னி பன்பார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மம்தா(40) என்ற மனைவியும் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இதேபோன்று அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திடீரென சமையல் அறைக்கு சென்ற சன்னி கையில் கத்தியுடன் திரும்பி வந்துள்ளார். அப்போது சன்னியின் இளைய சகோதரர் ஜீத்து இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் சண்டையை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது ஜீத்துக்கும், மம்தாவுக்கும் காயங்கள் ஏற்பட்டது.
இதில் ஒரு கட்டத்தில் சன்னியின் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் மூன்று பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சன்னி உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சன்னி நிலையாக ஒரு வேலையில் இல்லை என்று கூறப்படுகிறது. பார்சல் கொண்டு சென்று கொடுக்கும் பணியில் இருந்த அவர் பின் அதனை விட்டுவிட்டு மதுபானம் குடிப்பதும் அடிக்கடி சண்டை போடுவதுமாக இருந்துள்ளார். தற்போது மம்தாவும், ஜீத்துவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
