மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பீர் பார்களை குறிவைத்து திருட்டு செய்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 வயதான ராஜா கான் எனும் இளைஞன், தனது தந்தை அதிகமாக மது அருந்தியதால் இறந்ததாகக் கூறி, அதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த திருட்டுகளைச் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜா, மதுபானக் கடைகள் மற்றும் பீர் பார்களில் புகுந்து பொருட்களைத் திருடியதாகவும், தனது குற்றத்தை விசாரணையில் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, ராஜாவின் திருட்டு முறை மிகவும் வித்தியாசமானது. ஒல்லியான உடல் அமைப்பை பயன்படுத்தி, கடைகள் மற்றும் பார்களில் குறுகிய இடைவெளிகள் வழியாக நுழைந்து பொருட்களை எளிதில் திருடி வந்துள்ளார். சமீபத்தில், நாக்பூரிலுள்ள மயூரி சவ்ஜி பாரில் நடந்த திருட்டு சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ராஜாவை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், நகரில் உள்ள பல பீர் பார்கள் மற்றும் மதுக்கடைகளில் இதற்கு முன்பும் திருட்டு செய்திருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
पिता की शराब से मौत, बेटे ने शराब की दुकानों में की चोरी
महाराष्ट्र: नागपुर में एक युवक सिर्फ इसलिए चोरी करने लगा, क्योंकि उसको अपने पिता की मौत का बदला लेना था. दरअसल आरोपी राजा खान के पिता की कुछ साल पहले शराब पीने के कारण मौत हो गई थी, जिसके कारण वह शराब की दुकान चलाने वालों… pic.twitter.com/NQcG1XsT4j
— NDTV India (@ndtvindia) August 8, 2025
“>
பஞ்ச்பாவ்லி காவல் நிலைய அதிகாரி பாபுராவ் ராவத் கூறுகையில், ராஜாவுக்கு நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் பலவிதமான போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருந்தாலும், மது அருந்துவதில்லை என்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
தந்தையின் மரணம் தனது வாழ்க்கையை மாற்றியதாகவும், அதற்குப் பழிவாங்கும் எண்ணமே இந்த குற்றப்பாதைக்கு தள்ளியதாகவும் ராஜா கூறியுள்ளார். தற்போது அவர் மீது மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
